சம்பளமும் இல்ல…. மாஸ்க்கும் இல்ல…. மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தம்…..!!

சேலம், திருவாரூரில் இரண்டு மாதங்களாக சம்பளம் தராமல், கொரோனோ நோய் பரவி வரும் காலத்தில் முக கவசமும் தராமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு மாதம் ஊதியம் வழங்காமலும், கொரோனா நோய் தாக்கம் அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் மாஸ்க்கும் வழங்காமல் எங்களை அலக்களித்து வருவது வேதனை அளிப்பதாக கூறி அவர்கள் வேலையை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.