எனக்கு விளம்பரம் தேட அவசியமில்லை, வெள்ளம் பதித்த மக்களை நேரில் சென்று பார்க்க துப்பில்லை என்று தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் விளாசியுள்ளார்.
நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பை பார்வையிட இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் , அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் நிவாரண பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல் சும்மா பப்ளிசிட்டிக்காக ஓரிரு அமைச்சர்கள் வந்துள்ளார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார்.

ஸ்டாலினின் இந்த குற்றசாட்டை தமிழக முதல்வர் மறுத்ததோடு முக.ஸ்டாலின் தான் விளம்பரம் தேடுவதற்காக சென்றுள்ளார் என்று குற்றம் சாட்டினார். தமிழக முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் முக.ஸ்டாலின் கூறும் போது , நான் சென்னை மேயராக இருந்துள்ளேன் , அமைச்சராக இருந்துள்ளேன் , துணை முதல்வராக இருந்துள்ளேன் எனக்கு விளம்பரம் அவசியமில்லை என்றார்.

மேலும் அவர் கூறும் போது நீலகிரி மாவட்டத்தில் மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கூடலூர் சட்டமன்ற தொகுதி மழையால் காணாமல் போயுள்ளது. மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது.இதுவரைக்கும் முதலமைச்சர் அங்க போயி பார்க்கல , அதற்கு துரும்பில்ல என்னை விமர்சிப்பதற்கு என்ன யோகித வந்திருக்கு என்று கடுமையாக விமர்சித்தார்.