“கொரோனோ அச்சம்” யாரையும் காணோம்…..வெறிச்சோடிய பழனிமலை கோவில்……!!

பழனி மலைக்கோவிலில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3வது வீடான பழனி மலைக்கோவிலில் வார மற்றும் திருவிழா விடுமுறை காலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதற்கு காரணம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வர்.

இதனால் கூட்டம் எப்போதும்  நிறைந்த வண்ணம் காணப்படும். அந்த வகையில், தற்போது இந்தியாவில் பரவி வரும் வைரஸ் தாக்கத்தால் மக்கள் அதிகம் கூடும் இடமான விமான நிலையம், பேருந்து நிலையம், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக எப்போதும் அதிக கூட்டம் காணப்படும் பழனி மலைக்கோவில் நேற்றைய தினம் வெறிச்சோடி காணப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது  மக்களை கூட விடாமல் தடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.