“தோனிக்கு யாரும் ஆலோசனை வழங்கத் தேவையில்லை” முனாப் பட்டேல்.!!

தோனிக்கு யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் தெரிவித்துள்ளார் 

உலகக் கோப்பை தொடருடன் டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான தொடரில் இருந்து தோனி விலகியுள்ளார். காரணம் அவர் பாராமிலிட்டரி பிரிவில்பணி புரிவதற்கு விரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். எனினும் அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கவில்லை. எனவே அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image result for முனாப் படேல் தோனி

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தோனி தனக்கென்று தனி ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அதை அவர் ஏற்கனவே பிசிசிஐ யிடம் தெரிவித்திருப்பார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அவருக்கு யாரும் ஆலோசனை  வழங்கத் தேவையில்லை என்றார்.

Image result for முனாப் படேல்

மேலும் 1975 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி செய்த சாதனைகளை டோனி 2007 -2015 ஆம் ஆண்டுகளிலே செய்து விட்டார். அவர் அனைத்து கோப்பைகளையும்  இந்திய அணிக்கு  பெற்று தந்து விட்டார். தோனி போன்ற ஒரு வீரரை இந்திய அணியிலிருந்து எளிதில் தவிர்க்க முடியாது” என அவர் தெரிவித்தார்.