யாருமே இல்ல……”4,12,000 வீடுகளை வாங்குவதற்கு”…ஆய்வில் அதிர்ச்சி…!!

நாடு முழுவதும் 4.12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 9 பெருநகரங்களில் கட்டிமுடிக்கப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் விற்காமல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.பிராப் டைகர் என்ற கட்டுமான இணையதளம் நடத்திய ஆய்வில் 45 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விற்காமல் உள்ளதாகவும் , மும்பையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரம் வீடுகளும் ,  சென்னையில் 18, 709 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு விற்காமல் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.