இனி ஊசி தேவையில்லை…. சக்கரை நோயாளிகளுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு…!!

ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உட்கொள்ள அமெரிக்க ஆய்வாளர்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு நுட்பத்தை கண்டறிந்து உள்ளனர்.

அமெரிக்காவில் மசாஜ் ஸ்டர்ட்ச் என்ற தொழில் கல்வி நிறுவன ஆய்வாளர்கள் பன்றி ஒன்றை வைத்து மேற்கொண்ட பரிசோதனையின் முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் இந்த வாரம் தகவல்  ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இன்சுலின் மருந்து ஊசி மூலமே செலுத்தப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவிலான மாத்திரையை கண்டறிந்து அதன் மூலம் இன்சுலின் செலுத்தி சோதனையிட்டனர். ஆனால் அதில் சிறு குறைகள் இருந்தால் அவற்றை களைந்து மேம்படுத்தி ஆய்வாளர்கள் மாத்திரையை சுருக்கி அது வேறு எங்கும் நிற்காமல் நேராக சிறுகுடலை அடையும் வண்ணம் வடிவமைத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Image result for இன்சுலின்

30 மில்லி மீட்டர் நீளமுள்ள மாத்திரையை ஜீரண மண்டல இடங்கள்  பாதிக்காமல் இருக்க அதன் மீது பிரத்யேக பூச்சி பயன்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். சிறுகுடலில் ph அளவு அதிகமிருக்கும் என்பதால் அப்பகுதி அடைந்த பின்பே மாத்திரை வெடிக்கும் என்றும், பின்னர் மடங்கிய கைகள் போன்ற அமைப்பு ஒரு மில்லிமீட்டர் நீளம் கொண்ட ஊசி போன்ற கொத்துக்களை சிறுகுடல் சுவற்றில் செலுத்தும் என்றும் கூறியுள்ளனர். அப்பொழுது ஊசி போன்ற அமைப்பில் உள்ள இன்சுலின் மருந்து ரத்தத்தில் கலக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *