இனி தண்ணீர் பஞ்சம் வராது ….. புதிய திட்டத்தை முன்மொழிந்த முதலவர் …..!!

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க புதிதாக திட்டம் உருவாக்கியுள்ளதாக முதலவர் தெரிவித்துள்ளார்.

தமிழக்கத்தில் அண்மைக் காலமாக தொடர்ந்து வந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க இனி வரும் காலங்களில் இது போல் ஏற்படாமல் இருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏரி மற்றும் குளங்களை தூர்வார ரூ 1, 250 கோடியில் நீர் மேலாண்மை இயக்கம் திட்டம்  தொடங்கப்படும் என்று கூறினார்.

நேற்றைய தின சட்டசபையில் முதலவர் பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதில் , மழைநீர் சேகரிப்பு மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனைகள், ஆறுகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணிகள் என தமிழ் நாடு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளின் பிரச்சினைகள் போன்றவற்றை பற்றிய தெரிவித்தார்.

Image result for முதல்வர் சட்டசபை

மேலும்  பேசிய முதலவர் , வருங்காலத்தில் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் நீர் பற்றாக்குறையால் ஏற்படும் தடைகளை எதிர்கொள்ளவும் சில திட்டங்களை முன்வைத்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஆறு , ஏரி , குளங்களை தூர்வார புதியதாக நீர் மேலாண்மைத் திட்டம் இயக்கம் என்று  தொடங்கி அதற்காக சுமார் ரூ 1,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் , இதை வைத்துக் கொண்டு ஏரி மற்றும் குளங்களை தூர்வாரவும் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அனைத்து வீட்டிலும் வைக்க வலியுறுத்தவும்  உள்ளதாக தெரிவித்தார்.