தமிழகத்தில் இனி அனுமதி இல்லை – அரசு திடீர் அறிவிப்பு…!!

இனி கிராமசபை கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராமசபை கூட்டம் நடைபெறும். கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் கிராமத்திலுள்ள வாக்காளர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராவார்.

சட்டமன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராமசபை சட்டத்திற்கு உண்டு. இந்நிலையில் தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக்கூடாது என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. கிராமசபை என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஊராட்சிகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது