வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் மைக்ரோ ஓவன் இல்லாமல் அடுப்பிலேயே கேக் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள முழுமையாகப் படியுங்கள்
தேவையான பொருள்:
மூணு முட்டை,முக்கால் கிண்ணம் மைதா மாவு,பேக்கிங் பவுடர் ,வென்னிலா சாறு, உப்பு, முக்கால் கிண்ணம் சீனி

செய்முறை:
முக்கால் கிண்ணம் சீனியை அரைத்து எடுத்து வைக்க வேண்டும் மூணு முட்டையை நன்றாக கிளற வேண்டும் முழுமையாக மஞ்சள் நிறமாக மாற்ற வேண்டும் பின் அரைத்த சீனியை சேர்த்து கிளற வேண்டும் மற்றும் வெண்ணிலா சாறு சேர்த்து கிளற வேண்டும் பின் முக்கால் கப் மைதா மாவு சேர்த்துக் கிளற வேண்டும் சிறிது உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து ஒரே திசையில் கிளற வேண்டும் நன்றாக ஒன்று சேர்ந்த பின் நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் அல்லது பன்னீர் தடவ வேண்டும் கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்காக தடவ வேண்டும் பின் மாவை ஊற்ற வேண்டும் பின் அடுப்பில் தோசைக்கல்லை வைக்க வேண்டும் அதன் மேல் நான் ஸ்டிக் பாத்திரத்தை வைக்க வேண்டும் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும் 30 முதல் 45 நிமிடம் வரை வைக்க வேண்டும் பின் சுவையான கேக் தயார்