நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகின்றார். அதில், எளிதாக வருமானம் வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய விண்ணப்பம் உருவாக்கப்படும். கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு ரூபாய் பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தங்கம் வைரம் வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டது. புகையிலைப் பொருட்கள் மீதான வரி 16 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிகரெட் விலை அதிகரிக்கும். செல்போன் உதிரி பாகங்கள், கேமராக்கள், டிவிக்களுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ஏழு லட்சம் வரை பெறுவதற்கு வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சமாக உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு மொத்த வருமானம் ஒரு 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.