முடி வளரலையா….? முற்றிலும் இயற்கை….. TRY பண்ணி பாருங்க….!!

முடி இயற்கையாகவே நன்கு வளர்ச்சியடைய சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 1,500 (மி.லி)

அவுரி சாறு 500 மி.லி,

பொடுதலை சாறு 500 மி.லி,

வெள்ளைக் கரிசாலைச் சாறு 500 மி.லி,

சோற்று கற்றாழைச் சாறு 250 மி.லி,

நெல்லிக்காய் சாறு 250 மி.லி

செய்முறை :

மேற்கண்ட  அனைத்தையும் ஒரே மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து குறைந்த கொதிநிலையில் கொதிக்க வைத்து பின் வடிகட்டி குளிக்கச் செல்லுமுன் 4 மணி நேரத்திற்குப் பின் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து பின் குளித்தால் இயற்கையாகவே முடி நன்கு வளர்ச்சியடைய ஊக்குவிக்கும்.