எந்த படங்களையும் இயக்கக் கூடாது…. இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு…!!

இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படங்களையும் இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்தாண்டு ஏற்பட்ட கிரேன் விபத்து காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாரானார்.

ஆகையால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்கக் கூடாது என ஷங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா கூறியதாவது, இயக்குனர் ஷங்கர் தரப்பு வாதத்தை கேட்கும் முன் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஆகையால் இந்த வழக்கு தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது என்று கூறி இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டார்.