இனி கட்டணம் கிடையாது… சென்னை மக்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இ- பைக் உள்ளிட்டவற்றுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இனி சைக்கிள், எலக்ட்ரிக் பைக், ஹைப்ரிட் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.