சமையல் கேஸ் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து ..!!

சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் வினியோக உரிமம்  ரத்து செய்யப்படும்.

வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த வசூல் முறையை தடுக்க உத்தரவிடக் கோரி,  தனிநபர் ஒருவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில் இன்று விசாணைக்கு வந்தது, இதில்   வீட்டிற்கு வந்து சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய (கமிஷன்) கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவன டீலரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.பி, பாரத் பெட்ரோலியன் நிறுவனங்கள் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ஆனால் இண்டேன் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணை ஏப்ரல் 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.