பொங்கல் தினத்தன்று வெளியாகும் வாரிசு,  துணிவு படங்களுக்கு அதிகாலை 4,  5 மணிகளுக்கு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  அனைத்து மாவட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.  வாரிசு, துணிவு படங்களுக்கு 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 4, 5 மணிக்கு காட்சிகளுக்கு அனுமதிக்க கூடாது என்றும், திரையரங்க நுழைவு வாயில்களில் பெரிய பேனர்கள் வைப்பதற்கும் பால் ஊற்றுவதற்கும் அனுமதி இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.