நம்பர்1 இடத்தை பிடிக்கும்…. மெகா சங்கமம் மீது நம்பிக்கை…. மிஞ்சிய ஏமாற்றம்…!!

நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்று நினைத்த மெகா சங்கமம் இரண்டாம் இடத்தைப் பிடித்து ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.இந்நிலையில் தற்போது சீரியல்கள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றிணைத்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிய லட்சுமி சீரியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீசன் 2 சீரியல்களும் மெகா சங்கமமாக நடந்து வந்தது. இந்த மகா சங்கம் மிகவும் சுவாரசியமாக சென்றது.

ஆகையால் இந்த இரண்டு ஹிட் சீரியல்களும் தற்போது ஒன்று சேர்ந்து டி.ஆர்.பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.