“பிரிவினைவாதிகளுகான தேர்தல் அறிக்கை” நிர்மலா சீதாராமன் விமர்சனம்…!!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தீவிரவாதிகளுக்கும் , பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவான தேர்தல் அறிக்கை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  விமர்சித்துள்ளார்.

காங்கிஸ் கட்சி நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையில், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும், தேசத்துரோக சட்டம் நீக்கம் , ஜம்மு-காஷ்மீர் மாநிலதலைவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை  உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை மீது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பேட்டி க்கான பட முடிவு

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், பாதுகாப்பு படையினரின் சிறப்பு அதிகார சட்டத்தை நீர்த்துப் போக செய்வது நாட்டின் பாதுகாப்பு அமைப்பை ஆபத்திற்கு உள்ளாக்குவதாகும் ,  இது ஆயுதப் படையை பலவீனப்படுத்தும் முயற்சி என்று விமர்சனம் செய்தார்.மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்களை குறைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தேசத்துரோக சட்டத்தை நீக்கும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தேசத்தின் நலன் சார்ந்த தேர்தல் அறிக்கை அல்ல. இது தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவான தேர்தல் அறிக்கை என்று விமர்சித்துள்ளார்.