13,000 கோடி மோசடி செய்த நிரவ் மோடி லண்டனில் கைது…!!

 

இந்த நிலையில்  தப்பி ஓடிய நிரவ் மோடி சமீபத்தில் பிரிட்டனில் இருப்பது தொடர்பான வீடியோ வெளிவந்தது. இதனையடுத்து நிரவ் மோடியை  பிரிட்டனில் இருந்து கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்தது. இது தொடர்பாக இந்திய அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு ஓன்று கொடுக்கப்பட்டது.  இந்த மனுவை பெற்ற  உள்துறை அமைச்சகம் அதில் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து   நிரவ் மோடியை லண்டன் போலீசார் இன்று கைது செய்தனர்.பின்னர்  அவரை இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் அமலாக்கத்துறை சார்பில்  தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீது  பண மோசடியில் ஈடுபட்டதற்கான  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் அரசு உத்தரவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.