நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா… கொத்தாக சிக்கியவர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்த 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்கிறார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப் உத்தரவின்படி காவல்துறையினர் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்தந்த பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்த 17 பேரை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 260 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்த குற்றத்திற்காக அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *