நல்ல வேளை ஒன்னும் ஆகல… தூணில் மோதிய பேருந்து… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நிலைதடுமாறிய அரசுப்பேருந்து தூணில் மோதி நின்ற விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கீரனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த அரசு பேருந்தானது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் பேருந்தை ஓட்டுனரால் நிறுத்த முடியவில்லை. இதனையடுத்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருக்கும் தேனீர் கடையின் அருகில் உள்ள ஒரு தூணின் மீது பலமாக மோதிய பின் பேருந்து நின்றது. இதில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த வளர்மதி என்ற முதியவர் காயமடைந்தார்.

இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்த வளர்மதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் பேருந்தின் கண்ணாடி, இரும்புத்தூண் ஆகியவை சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்குவரத்து அதிகாரிகளுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *