இரவு நேரங்களில் எடுத்து கொள்ள வேண்டிய உணவு குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
இரவு நேரங்களில் நாம் உண்ணும் பிரியாணி, பரோட்டா, சிக்கன் ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகள் ஜீரண சக்தியை குறைத்து,அஜீரண கோளாறை உண்டாக்கி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இரவில் பொதுவாக மென்மையான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதன்படி இட்லி,சப்பாத்தி, கோதுமை, ரொட்டி ,இடி யாப்பம், உப்புமா உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது மிக மிக நல்லது. மேலும் இரவு 8 to 9 மணிக்குள் உணவை உண்டு முடித்து விட்டு உறங்கச் செல்வது மிகச் சிறந்தது.