“இரவில் கார்போ உணவுகள் சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா”…? என்ன மாதிரியான கார்போ உணவுகளை சாப்பிடலாம்…!!

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கும், நாம் உண்ணும் உணவு மிகவும் அவசியம். ஒவ்வொரு உணவையும் நாம் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு  ருசிப்பதை விட அதில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சமீபகாலமாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அதனை உட்கொள்ள வேண்டாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

இதனை ஏற்றுக்கொண்டு கார்போஹைட்ரேட் சம்பந்தப்பட்ட உணவை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மிகவும் முக்கியமானது. அது உடலுக்கு எனர்ஜியை தருகிறது. இதனை இரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறு. நாம் இரவில் கூட கார்போஹைட்ரேட் உணவுகளை தாராளமாக சாப்பிடலாம்.

என்ன சாப்பிட வேண்டும்:

கார்போஹைட்ரேட் என்பது நார்ச்சத்து, ஸ்டார்ச், சக்கரை ஆகிய மூலக்கூறுகளால் ஆனது. காப்ஸ் உணவுகள் என்று சொன்னதும் முதலில் நம் நினைவுக்கு வருவது வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் சப்பாத்தி போன்றவை. இந்த மூன்று உணவுப் பொருட்கள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகள் வரை காபஸ் நிறைந்துள்ளது. நல்ல காப்ஸ் அதிக நார்ச்சத்து அளவுகளைக் கொண்ட உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நன்மையை கொடுக்கும்.

கெட்ட காப்ஃபைன் நிறைந்த உணவுகளை நாம் உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. வெள்ளை சர்க்கரை, வெள்ளை ரொட்டி, கேக், பேக்கரி உணவுகளை நாம் உணவில் எடுத்துக்கொள்வது தவறானது. காய்கறிகள் பழங்கள் போன்ற பொருள்களை நாம் எடுத்துக் கொண்டால் நம் உடல் எடையும் அதிகரிக்காது. நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். கார்போஹைட்ரேட் வேண்டாம் என உடனடியாக முழுவதும் ஒதுக்கிவிட முடியாது.

அதற்கு பதிலாக கார்போஹைட்ரேட் உணவுகளில் எது நல்லது என்பதை அறிந்து சாப்பிட வேண்டும். அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் எடுத்துக் கொண்டால் நல்லது நடக்கும். உடல் எடையை குறைக்க நம்மில் பலரும் கஷ்டப்படுகிறோம். இதற்கு இந்த வகையான உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை ஈஸியாக குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *