மீண்டும் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு…. பிரபல நாட்டில் பதற்றம்….!!!!

டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலியா தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து நாடு அமைந்துள்ளது. இதனால் அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படும்.

முன்னதாக அந்நாட்டில் கெர்மடெக் தீவுகளில் கடந்த வியாழக்கிழமை அன்று 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்நாட்டின் கெர்மடெக் தீவுகளில் இன்று காலை 3.44 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ளதாகவும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா புவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply