“அடடே!”.. ஷார்ட்ஸ் உடையில் செய்தி வாசிக்கும் தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படம்..!!

பிரபல தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர் ஒருவர் சாதாரணமாக ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு செய்தி வாசித்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா ஊரடங்கினால், தொலைக்காட்சி நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்யும் திட்டத்தை கொண்டு வந்தன. எனவே பல நிகழ்ச்சிகள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. எனவே தொகுப்பாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

எனவே பணியின் இடையில், நேரலையின் போது, தொகுப்பாளர்களின் குழந்தைகள் இடையூறு செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் தற்போது, பல நாடுகளில் கொரோனா குறைய தொடங்கியுள்ளதால் படிப்படியாக கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் பழைய நிலைக்கு திரும்பி வருகின்றனர். எனவே அலுவலகங்கள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், பிரபல ஊடகத்தின் தொகுப்பாளர், வீட்டில் இருக்கும்போது எந்த உடை அணிந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாரோ, அதே போன்று சாதாரண ஷார்ட்ஸ் உடையை அலுவலகத்திலும் அணிந்துகொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *