கணவன் மனைவிக்கிடையே சின்ன தகராறு… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு… நிகழ்ந்த துயர சம்பவம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரிசிங் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினரான எழிலரசி என்பவரை காதலித்து பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் உணவு சமைப்பது தொடர்பாக விக்னேஷ் மற்றும் எழிலரசி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஓட்டலில் உணவு வாங்கி வருவதாக விக்னேஷ் எழிலரசியிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து ஹோட்டலில் உணவு வாங்கி விட்டு விக்னேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்ததால் விக்னேஷ் கதவை பலமுறை தட்டியும் எழிலரசி கதவை திறக்கவில்லை.

இதனால் விக்னேஷ் அருகில் உள்ளவர்களை அழைத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது எழிலரசி படுக்கை அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *