சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி வடக்கு மாடவீதியில் சந்தீப்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சந்தீப்குமார் மீனாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதில் மீனாட்சி தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது மீனாட்சி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில் வளைகாப்பு நடத்துவது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து சந்தீப்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாட்சி கதறி அழுதார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தீப்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.