சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நியூசீலந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

பசிபிக் கடலின் தீவு நாடான நியூசீலந்தில் இன்று அதிகாலை 3.28 (அந்நாட்டு நேரப்படி 10.58) மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலநடுக்கம் நியூசீலந்தின் Taumarunui மாகாணத்தில் உள்ள கிங் கண்ட்ரி என்னும் நகரில் இருந்து சுமார் 210 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நியூசீலந்து பிரதமர் ஜெசிகா அந்நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்த விவரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து கொண்டிருந்தார். அந்த சமயம் திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 25,000-க்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *