“முருகனின் 4-வது படைவீடு” நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜை…. கோவிலில் குவிந்த பக்தர்கள்….!!!

புத்தாண்டை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமி மலை முருகனின் 4-வது படை வீடாக உள்ளது. இந்த கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில் புத்தாண்டு பிறப்பை ஒட்டி முருகர் வைரவேல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் மலைக்கோவிலில் உள்ள சன்னதி முன்பு ஆண்களும், பெண்களும் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். அதோடு புத்தாண்டை முன்னிட்டு முருகன் சன்னதியில் அமைந்துள்ள 60 திருப்படிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது 60 குத்து விளக்குகள் ஏற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *