புத்தாண்டு கொண்டாட்டம்…. அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு…!!

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு மமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக  பல்வேறு பாதிப்புகளை சந்த்தித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் புதிதாக ஒரு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கடற்கரை மற்றும் சாலைகளிலும் 2021 வருட புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மேலும் டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜன 1ம் தேதி பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அரிசியாகி வெளியிட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது அதிக அளவில் மக்கள் கூட்டமாக பங்கேற்க வாய்ப்புள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதன் காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சில வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் சூழலில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.