“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை வலுவிழந்த காரணத்தால் குறைவாக அளவே மழை பெய்துள்ளது. இதனால் அதிகளவில் பருவமழையை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பருவ மழையை தொடங்கிய நாள் முதல் வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இன்று மாலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்புப்பில் ,

வடக்கு வடகிழக்கு வங்க கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை பெய்யும் . இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் வட மேற்கு திசையில் நகரும்  என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் , இந்த காற்றழுத்த பகுதியால் ஈரப்பதம் அதிகரித்து   தென் மேற்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.