“கடாரம் கொண்டான்” படத்தின் புது அப்டேட்…!!!

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான். படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் தேதி வெளிவரும் என்றும் ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற மே மாதம் அல்லது  ஜூன் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.