இனி வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களை கண்டறிய விண்கலங்கள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இனி வரக்கூடிய காலங்களில் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறியும் விதமாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,இதன் மூலம் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பேரிழப்புகளை தவிர்க்க முடியும் என்றும், இஸ்ரோ விண்கல ஆய்வகத்தின் முன்னால் இயக்குனர் மயில் சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.