இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் … உற்சாகத்தில் மகிழும் வாடிக்கையாளர்கள் ..!!

இந்தியாவில் ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 

ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக 47.2 எம்.எம். மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 இன்ச் AMOLED  டிஸ்ப்ளே , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஸ்டான்ட்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது.

Image result for ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம்.

மேலும், 95 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி அதிகபட்சம் 12 நாட்கள் பேட்டரி லைஃப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடல் ஸ்டாரி பிளாக், செர்ரி பிலாசம் பின்க், மூன்லைட் வைட் மற்றும் கோரல் ரெட் நிறங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *