சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி அறிமுகம்….!!!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

தி ஃபிரேம் 55 இன்ச் 4K HDR , 32 இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 HD மற்றும் 40 இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 FULL HD LED டி.வி. என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட் டி.விக்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் 55 இன்ச் 4K HDR டி.வி.யில் QLED தொழில்நுட்பம், இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி. வைக்கப்பட்டுள்ள அறையின் சூழலுக்கு ஏற்ப ஸ்கிரீனின்  பிரைட்னஸ் தானாகவே  மாறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டி.வியை. பயன்படுத்தாத  நேரத்தில் ஆர்ட் மோடிற்கு சென்று கலை சார்ந்த புகைப்படங்களை காட்டும் வசதியும் உள்ளது.

Image result for Samsung 40-inch Smart 7-in-1 LED TVs

பில்ட்-இன் ஏர்பிளே 2 வசதி இருப்பதால் ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் வசதிகளையும் டி.வி.யில் காண இயலும். புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மிக நேர்த்தியாக பிரதிபலிப்பதற்காக குவாண்டம் டாட் மற்றும் HDR10 தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.தி ஃபிரேம் 55 இன்ச் 4K HDR டி.வி. பல்வகை ஸ்மார்ட் சாதனங்களுடன் வயர்லெஸ் மூலம் இணைந்து ஸ்மார்ட் திங்ஸ் செயலி மற்றும் ஒன் ரிமோட் கண்ட்ரோல் வழியாக இயங்குகிறது.

Image result for Samsung 40-inch Smart 7-in-1 LED TVs

32-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.யை வாங்கும் அனைவருக்கும் ரூ. 999 முதல் வட்டியில்லா மாத தவணை வசதியும், 55-இன்ச் 4K HDR டி.வி. வாங்குவோருக்கு மாத தவணையாக ரூ. 4,999  வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் 32-இன்ச் டி.வி. ரூ. 22,500, 40-இன்ச் டி.வி ரூ. 33,900, தி 55- இன்ச் டி.வி. ரூ. 1,19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Image result for Samsung THE FRAME INCH

32 இன்ச் மற்றும் 40-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி. ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரமும், 55-இன்ச் டி.வி ஆகஸ்ட் 12 முதல் அமேசான்,பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஆன்லைன் அதிகாரபூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.