புதிய ஆட்சியில் “நானே மீண்டும் வருவேன்” பீகாரில் பிரதமர் பேச்சு…..!!

வளர்ச்சி திட்டத்துடன் புதிய ஆட்சியில் மீண்டும் நானே வருவேன் என்று பிரதமர் மோடி பீகார் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

7 கட்டமாக நடைபெற்று வருகின்ற மக்களவை தேர்தலின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 7_ஆம்  மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது . ஆட்சியை தக்க வைக்க பிஜேபியும் , ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும்  தீவிரமாக இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பீகார் மாநிலத்தின் பாடலிபுத்ராவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய மோடி , இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் கடைசி பொதுக்கூட்டம் இதுவாகும். நான் என்னுடைய வளர்ச்சி திட்டங்களுடன் புதிய ஆட்சியில் மீண்டும் நானே வருவேன் உங்களுடைய அன்பு என்னுடைய வெற்றி மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. என்று பிரதமர் மோடி பேசினார்.