வந்தது புது ரேஷன் ATMகள்.. ரேஷன் கடையில் நடக்கும் தில்லுமுல்லுக்கு ஆப்பு..!!!

உத்திரபிரதேசத்தில் ரேசன் கடைகளில் நவீன தானிய ஏடிஎம்-கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகைகளை பதிவு செய்தால் தானியங்களை பெறும் வகையில் தானிய ஏடிஎம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே வாரணாசி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இவ்வகை ஏடிஎம்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் ஏழு கிலோ தானியத்தை இயந்திரங்கள் வழங்கும் என்றும் ரேஷன் கடைகளில் எடை அளவு ஆகியவற்றில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply