அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்  அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கு  விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது . அதன்படி கடந்த 2023- 24 ஆம் ஆண்டில் மாணவர் விசா மறுப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், 6.79 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதும் அதில் 2.79 லட்சம் விண்ணப்பங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை நிராகரித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரங்களின்படி கடந்த 2024 ஆம் ஆண்டு விசா மறுப்புடன் ஒப்பிடும்போது தற்போது விசா மறுப்பு அமெரிக்காவில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா கல்வி நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் F1 விசா விண்ணப்பங்களிலேயே பெரும்பாலாக மறுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று  கல்வி சாரா பயிற்சி மையங்களில்  வழங்கப்படும் M1 விசாகளும்  மிக குறைந்த அளவுகளிலே மட்டும் தான்  ஏற்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் விசாக்களில் 90%  F1 விசா வகை மட்டுமே உள்ளன. ஆனால் இந்த விசா மறுப்பு குறித்து அமெரிக்கா தெளிவான விவரங்களை இதுவரை வெளியிடவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்திய மாணவர்களுக்கான விசா எண்ணிக்கை கடந்த 2023-ல் 1 ஒரு லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 64, 008 ஆக குறைந்துள்ளது. இது இந்திய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.