எந்த நேரத்திலும் அபாயம் ஏற்படும்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

ஆபத்தான மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதியவை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 வழி சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக தினம் தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை சென்று வருகின்றன. இந்நிலையில் படப்பை அருகே சாலை ஓரம் உள்ள மின்கம்பம் சிமெண்ட் கலவை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிந்து ஆபத்தான நிலையில் பல மாதங்களாக உள்ளது. இதேபோல் சாலை ஓரம் ஒரு சில மின் கம்பங்களில் சிமெண்ட் கலவை பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் மின்கம்பங்கள் பலத்த காற்று வீசும் போது எந்த நேரத்திலும் சாய்ந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதியவை அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *