பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு பதவியேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டாக வேலை பார்த்த கெளதம் கோயல் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த எம்.ஜெயபாலன் பெருந்துறை ரூரல் போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார். நேற்று பதவி ஏற்றுக்கொண்ட எம்.ஜெயபாலனுக்கு ரூரல் டிவிஷனை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இவர் ஏற்கனவே சத்தியமங்கலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply