‘அதர்வா’ நடிக்கும் புதிய படம்….  வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. ட்ரெண்டாகும் ரசிகர்கள்….!!!

அதர்வா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தள்ளி போகாதே. இதனையடுத்து, இவர் நடிப்பில் குருதி ஆட்டம், ட்ரிகர்,  ஒத்தைக்கு ஒத்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதனைத்தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

இந்த படத்தில் ரகுமான் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், ”நிறங்கள் மூன்று” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *