“திருமணமான 15-வது நாள்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தர்மபுரியில் நடந்த சோகம்….!!!

திருமணம் ஆன 15-வது நாள்  இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிபட்டினம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பிரியங்கா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியங்காவிற்கும், மதன் குமார் என்ற வாலிபருக்கும் கடந்த 16-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் நடைபெற்ற நாளில் இருந்தே பிரியங்காவிற்கும் மதன் குமாருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மதன்குமார் தர்மபுரி மாவட்டத்திலுள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு விருந்திற்காக தனது மனைவி பிரியங்காவுடன் செய்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த பிரியங்கா வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரியங்காவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ப்ரியங்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும் திருமணமான 15-ஆவது நாளிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.