திருமணமான 3 மாதத்திலேயே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவருக்கும், புளியம்பட்டியில் வசித்து வரும் சரண்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புகுந்த வீட்டில் தனியாக இருந்த சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரண்யாவின் தந்தை பழனியப்பன் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரண்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூற்று பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது சரண்யாவிற்கு திருமணமாகி 3 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.