என்ன காரணமா இருக்கும்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கரூரில் பரபரப்பு….!!!

திருமணமான 5-வது மாதத்திலேயே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை பகுதியில் கணேசமூர்த்தி-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சதீஷ்குமார் உறவினர் பெண் பவித்ராவை காதலித்து 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதில் திருமணத்திற்கு பிறகு பவித்ரா அப்பகுதியில் உள்ள தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு பணிக்கு சென்று வந்தார். மேலும் சதீஷ் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு பவித்ரா தனது அறைக்கு தூங்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் வேலை முடிந்தது வீட்டிற்கு வந்த  சதீஷ்குமார் பவித்ரா அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் அருகிலுள்ள வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பவித்ராவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பவித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.