குளத்திற்குள் பாய்ந்த கார்…. புதுமண தம்பதியின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் வடக்கு தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகரில் இருக்கும் சிமெண்ட் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் இந்திரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நேற்று புதுமண தம்பதியினர் சிவந்திபுரம் கஸ்பா பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சிவந்திபுரம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அம்மன் கோவில் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தம்பதியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.