இந்தியாவில் புதிய அறிமுகம்… பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பைக்…!!

Image result for அவெஞ்சர் 160 ஸ்டிரீட்இந்த புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள் ஸ்பைசி ரெட் மற்றும் எபோனி பிளாக் எனறு இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160.4CC சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதே என்ஜின் தான் பலசர் 160 NS மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் இதன் செயல்திறன் சற்று வித்தியாசமாக டியூன் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் இந்த என்ஜின் 15 PHP பவர் மற்றும் 13.5 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது.

Image result for அவெஞ்சர் 160 ஸ்டிரீட்இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. என்ஜின் மாற்றம் அதை தவிர அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை. அதேப்போல் பிரேக்கிங்கை பொருத்தவரை அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலின் முன்புறம் 260 MM டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் 130 MM டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரேக்குகளுடன் சேர்ந்து சிங்கிள் சேனல் APS சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல் மற்ற அம்சங்களை பொருத்தவரை LED டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.