புதுச்சேரி அரசுப் பள்ளி… சத்துணவுக்கு பதில் பணம்… தொடங்கிவைத்த துணை சபாநாயகர்..!!

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை உழவர்கரை தொகுதி துணை சபாநாயகர் பாலன் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சத்துணவுக்கு பதிலாக நான்கு கிலோ அரிசி, ரூபாய் 290 மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு அரசியுடன் ரூபாய் 390 பணம் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் உழவர்கரை தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர், துணை சபாநாயகருமான பாலன் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *