புதிய மாறுபட்ட நிறம்…. புதிய தோற்றம்…. களமிறங்கும் TVS மோட்டார் சைக்கிள்….!!

TVS மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

Image result for TVS ரேடியான் 110CC 

மேலும் இது மற்ற நிற வேரியண்ட்களை விட ரூ.1,200 அதிகம் தான். ஏற்கனவே ரேடியான் 110CC மாடல் மெட்டல் பிளாக், பியல் வைட், ராயல் பர்ப்பிள் மற்றும் கோல்டன் பெய்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. தற்போது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளில் புதிய நிறத்தை தவிர மெக்கானிக்கல் அம்சம், தோற்றத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்பட்டவில்லை.

Image result for TVS ரேடியான் 110CC 

அந்த வகையில் முந்தைய வேரியண்ட்களை போன்றே புதிய மாடலிலும் குரோம் கார்னிஷ், ரப்பர் டேன்க் பேட்கள், 3டி TVS லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.இந்த புதிய ரேடியான் மோட்டார்சைக்கிள் சின்க்ரோனைஸ் செய்யப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது இந்த பிரிவு மோட்டார்சைக்கிளில்களில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது சிறப்பான பிரேக்கிங் கண்ட்ரோல் வழங்கும் எனறும், இதனால்    மோட்டார்சைக்கிள் ஸ்கிட் ஆகாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Image result for TVS ரேடியான் 110CC 

TVS ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளில் 109.7CC, சிங்கிள் சிலிண்டர், 3-வால்வ் மற்றும் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.3 PHP பவர் @7000 RPM மற்றும் 8.7 NM @5000 RPM செயல்திறனை வழங்குகிறது. ரேடியான் 110 CC மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 69.3 கிலோமீட்டர் வரை செல்லும் என TVS நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *