வங்கதேச அணிக்கு புதிய பயிற்சியாளர் … 2023 உலக கோப்பைக்கு டார்கெட் ..!!

வங்க தேச அணிக்கு  புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் .

இங்கிலாந்தில் கடந்த மே 30-ல் தொடங்கி ஜூலை 14 வரை உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. இதில் 9 போட்டிகளில் விளையாடி  3 போட்டிகளில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் ஆட்டத்திலேயே வங்கதேச அணி வெளியேறியது.

Image result for bangladesh coach steve rhodes

இதன்பின்  , வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீவ் ரஹோட்ஸ்  உடனான ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியமானது ரத்து செய்தது. மேலும்  , 2023 உலகக் கோப்பையை டார்கெட் செய்யும்  வகையில்  வங்கதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமக்கப்பட்டுள்ளார் . இவரது வயது 44 ஆகும் .

Image result for russell domingo

குறிப்பாக  அவர் வரும் ஆகேஸ்ட் 21-ம் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு வங்கதேச அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. மேலும் , தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டொமிங்கோ அந்நாட்டின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for bangladesh cricket team logo

அதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி அந்நாட்டு அணி டி-20 உலகக்கோப்பைக அரையிறுதி வரை முன்னேருவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார் . மேலும், 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது அரையிறுதி சுற்று வரை முன்னேறியதும் இவரால் என்பதும் குறிப்பிடத்தக்கது.