அமமுக_வின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு …..!!

அமமுக சார்பில் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் அறிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்ததை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

தொடர்ந்து நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை தேடி சென்றுகொண்டு இருக்கின்ற வேளையில் நேற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் TTV தினகரன். இதில் புதிய நிர்வாகிகள் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகிய நிலையில் இன்று

 

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் , அமமுக துணை பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக வெற்றிவேலுவும், தலைமை நிலைய செயலாளராக மனோகரனும், கொள்கை பரப்பு செயலாளராக சிஆர்.சரஸ்வதியும் நியமிக்கப்படுவதாக  TTV தினகரன் தெரிவித்துள்ளார்.