புதிய சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்…!!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் `மெர்சல்’. இந்தப்படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாகும். `மெர்சல்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்’ பாடலும் சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பபை பெற்றது. கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் வெளியாகியது.

Image result for ஆளப்போறான் தமிழன் 100milliyan

தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது, இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விவேக் எழுதிய வரிகளில், சத்யபிரகாஷ், கைலாஷ் கெர், தீபக், பூஜா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். தமிழையும், தமிழர்களின் பெருமையையும் எடுத்தும் சொல்லும் இந்த பாடலின் வரிகள் உலகமெங்கும் மாஸ் காட்டி வருகிறது.